
'தல- தளபதி': வைரலாகும் ஜடேஜாவின் புதிய புகைப்படம்; உண்மை என்ன?
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் இணையத்தில் CSKவின் 'தல' தோனியும், ரவீந்திர ஜடேஜாவும் ஒரு தோட்டத்தில் நின்று ரசிப்பது போன்ற புகைப்படம் வைரலானது.
இந்த புகைப்படத்தை CSK அணியின் சமூக ஊடக பக்கமும் பகிர்ந்திருந்தது.
உடனே, ஜடேஜா CSK அணியை விட்டு விலக முடிவெடுத்துள்ளதாகவும், அதற்காக தோனியின் கருத்தையும் ஒப்புதலையும் பெறுவதற்காகவே ஜடேஜா அவரை நேரில் சந்தித்துள்ளார் எனவும் செய்திகள் வெளியாகின. கூடவே ஜடேஜா குஜராத் அணிக்கு திரும்ப முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட செய்தியின்படி, இந்த புகைப்படமே எடிட் செய்யப்பட்ட புகைப்படம்.
ஒரிஜினல் புகைப்படத்தில் ஜடேஜா மட்டும் தன்னுடைய தோட்டத்தில் நிற்பது போல இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஐபிஎல் ஏலத்தில் ஜடேஜா அணியில் நீடிப்பார் என்றே கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Imagine Thala & Thalapathy in this field together! 😉💛🤳#WhistlePodu #WhatIf@imjadeja @msdhoni pic.twitter.com/cjQMyu52Sk
— Chennai Super Kings (@ChennaiIPL) August 27, 2024