LOADING...
ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டி பெங்களூரில்! முழு அட்டவணை விவரம்
ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடு

ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டி பெங்களூரில்! முழு அட்டவணை விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 11, 2026
07:35 pm

செய்தி முன்னோட்டம்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் 2026 சீசனின் முதல் இரண்டு வாரங்களுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), மார்ச் 28 அன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியை எதிர்கொள்கிறது. இருப்பினும், பெங்களூரில் ஆர்சிபி விளையாடும் போட்டிகள் அனைத்தும் மார்ச் 13 அன்று நிபுணர் குழு வழங்கும் அனுமதியைப் பொறுத்தே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டிகள்

முக்கிய அணிகளின் முதல் போட்டிகள்

ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மார்ச் 29 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் சந்திக்கிறது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 30 அன்று ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), கௌஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியுடன் மோதவுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் ஏப்ரல் 1 ஆம் தேதி தங்களின் முதல் போட்டியில் மோதுகின்றன.

அட்டவணை

முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணை

மார்ச் 28 (சனி): ஆர்சிபி vs எஸ்ஆர்எச் - பெங்களூர் மார்ச் 29 (ஞாயிறு): எம்ஐ vs கேகேஆர் - மும்பை மார்ச் 30 (திங்கள்): ஆர்ஆர் vs சிஎஸ்கே - கௌஹாத்தி மார்ச் 31 (செவ்வாய்): பிபிகேஎஸ் vs ஜிடி - முல்லன்பூர் ஏப்ரல் 1 (புதன்): எல்எஸ்ஜி vs டிசி - லக்னோ ஏப்ரல் 2 (வியாழன்): கேகேஆர் vs எஸ்ஆர்எச் - கொல்கத்தா ஏப்ரல் 3 (வெள்ளி): சிஎஸ்கே vs பிபிகேஎஸ் - சென்னை ஏப்ரல் 4 (சனி): டிசி vs எம்ஐ - டெல்லி ஏப்ரல் 4 (சனி): ஜிடி vs ஆர்ஆர் - அகமதாபாத் ஏப்ரல் 5 (ஞாயிறு): எஸ்ஆர்எச் vs எல்எஸ்ஜி - ஹைதராபாத்

Advertisement

அட்டவணை

முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணை

ஏப்ரல் 5 (ஞாயிறு): ஆர்சிபி vs சிஎஸ்கே - பெங்களூர் ஏப்ரல் 6 (திங்கள்): கேகேஆர் vs பிபிகேஎஸ் - கொல்கத்தா ஏப்ரல் 7 (செவ்வாய்): ஆர்ஆர் vs எம்ஐ - கௌஹாத்தி ஏப்ரல் 8 (புதன்): டிசி vs ஜிடி - டெல்லி ஏப்ரல் 9 (வியாழன்): கேகேஆர் vs எல்எஸ்ஜி - கொல்கத்தா ஏப்ரல் 10 (வெள்ளி): ஆர்ஆர் vs ஆர்சிபி - கௌஹாத்தி ஏப்ரல் 11 (சனி): பிபிகேஎஸ் vs எஸ்ஆர்எச் - முல்லன்பூர் ஏப்ரல் 11 (சனி): சிஎஸ்கே vs டிசி - சென்னை ஏப்ரல் 12 (ஞாயிறு): எல்எஸ்ஜி vs ஜிடி - லக்னோ ஏப்ரல் 12 (ஞாயிறு): எம்ஐ vs ஆர்சிபி - மும்பை

Advertisement