
IPL 2024 : கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக கவுதம் காம்பிர் நியமனம்
செய்தி முன்னோட்டம்
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு, 2024 சீசனுக்கு முன்னதாக கவுதம் காம்பிர் அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, 2011 முதல் 2017 வரை கேகேஆர் அணியின் கேப்டனாக விளையாடிய கவுதம் காம்பிர் அணிக்கு 2012 மற்றும் 2014இல் என இரண்டு முறை பட்டத்தை வென்று கொடுத்தார்.
மேலும், 2014இல் நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் அவரது தலைமையில் கேகேஆர் இரண்டாம் இடத்தை பிடித்தது.
ஓய்வுக்கு பிறகு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக இருந்து வந்த கவுதம் காம்பிர், தற்போது மீண்டும் கேகேஆர் அன்னிக்கே தியும்பியுள்ளார்.
இதையடுத்து அணிக்கு வழிகாட்டி மீண்டும் கோப்பையை வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
கேகேஆர் அணியில் இணைந்தார் கவுதம் காம்பிர்
Welcome home, mentor @GautamGambhir! 🤗
— KolkataKnightRiders (@KKRiders) November 22, 2023
Full story: https://t.co/K9wduztfHg#AmiKKR pic.twitter.com/inOX9HFtTT