
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : கடந்த கால புள்ளிவிபரங்கள்
செய்தி முன்னோட்டம்
2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 10வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) எதிர்கொள்கிறது.
லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட்டி நடக்க உள்ளது.
ஐபிஎல் 2023 சீசனில் எல்எஸ்ஜி ஒரு வெற்றி மற்றும் தோல்வியை பெற்றுள்ள நிலையில், எஸ்ஆர்எச் இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் மட்டும் விளையாடி அதில் தோல்வியை மட்டுமே பெற்றுள்ளது.
கடந்த சீசனில்தான் எல்எஸ்ஜி அறிமுகமானதால், இரு அணிகளும் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளன.
அந்த போட்டியில் எல்எஸ்ஜி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
எல்எஸ்ஜி vs எஸ்ஆர்எச்
எல்எஸ்ஜி vs எஸ்ஆர்எச் : இரு அணிகளின் முக்கிய புள்ளிவிபரங்கள்
கைல் மேயர்ஸ் தனது ஐபிஎல் அறிமுகத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 73 ரன்கலும், பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 53 ரன்களும் எடுத்தார்.
இதன் மூலம் தனது முதல் இரண்டு ஐபிஎல் போட்டிகளில் 50+ ஸ்கோரை அடித்த முதல் வீரர் ஆனார்.
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எல்எஸ்ஜியின் தொடக்க ஆட்டத்தில் மார்க் வுட் அபாரமாக விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எஸ்ஆர்எச் தரப்பில் இந்த முறை சொல்லிக்கொள்ளும்படி எந்த சாதனைகளும் இல்லை என்றாலும், ஐபிஎல் தொடரில் மொத்தமாக புவனேஷ்வர் குமார் பவர்பிளேயில் மொத்தம் 57 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ராகுல் திரிபாதியின் ஸ்டிரைக் ரேட் கடந்த சீசனில் லியாம் லிவிங்ஸ்டோனுக்கு (182.08) அடுத்து இரண்டாவது இடத்தில் 158.23 ஆக இருந்தது.