எஸ்ஆர்எச் vs கேகேஆர் : டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
ஐபிஎல் 2023 தொடரின் 47வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ச்) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கேகேஆர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- கேகேஆர் : ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி. எஸ்ஆர்ச் : மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், ஹாரி புரூக், அப்துல் சமத், மார்கோ ஜான்சன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், கார்த்திக் தியாகி, டி நடராஜன்.