ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிடல்ஸ் : கடந்த கால புள்ளி விபரங்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) சனிக்கிழமை (ஏப்ரல் 15) ஐபிஎல் 2023 இன் 20வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணியை எதிர்கொள்ள உள்ளது. பாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ஆர்சிபி மீண்டும் தோல்வியில் இருந்து மேலும் முனைப்புடன் உள்ளது. டேவிட் வார்னர் தலைமையிலான டிசி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய நிலையில், முதல் வெற்றியை பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஐபிஎல்லில் இதுவரை இரு அணிகள் நேருக்கு நேர் மோதிய 28 போட்டிகளில், ஆர்சிபி 17 முறையும் டிசி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் முடிவில்லாமல் முடிந்துள்ளது. இருப்பினும், கடைசியாக விளையாடிய ஆறு போட்டிகளில் டிசி நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள முக்கிய மைல்ஸ்டோன்கள்
டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 7,000 ரன்களை எட்டுவதற்கு ஆர்சிபி அணியின் தினேஷ் கார்த்திக்கிற்கு இன்னும் 49 ரன்கள் தேவை. ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டிசி அணிக்கு எதிராக 1,000 ரன்களை எடுக்க 51 ரன்கள் தேவை. டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை முடிக்க டிசி அணியின் ரோவ்மேன் பவல் 54 ரன்கள் தொலைவில் உள்ளார். டிசி அணியின் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகளை எடுக்க இன்னும் 3 விக்கெட்டுகள் தேவை. டிசி அணியின் அன்ரிச் நார்ட்ஜே ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகளுக்கு 5 விக்கெட்டுகள் தொலைவில் உள்ளார். ஆர்சிபி அணியின் டேவிட் வில்லி டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை எடுக்க 6 விக்கெட்டுகள் தேவையாக உள்ளது.