டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11
இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஏப்ரல் 1 ஆம் தேதி சனிக்கிழமையன்று டெல்லி கேப்பிடல்ஸை (டிசி) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) எதிர்கொள்கிறது. இரு தரப்பும் சில அபாரமான வீரர்களை கொண்டுள்ளதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. எல்எஸ்ஜி கடந்த சீசனில் அறிமுகமான நிலையில், முதல் தொடரிலேயே பிளேஆப் வரை முன்னேறியது. மறுபுறம் டிசி முதல் இரண்டு சீசன்களில் பிளேஆப் சுற்றுக்கு சென்றது. மேலும் 2013 முதல் 2018 வரை ஒருமுறை கூட பிளேஆப்பை எட்டாத நிலையில், 2011, 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கடைசி இடத்தையே பிடித்து பரிதாபமா வெளியேறியது. மேலும் கடந்த சீசனில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
டேவிட் வார்னர் தலைமையில் களமிறங்கும் டெல்லி கேப்பிடல்ஸ்
டிசி இந்த முறை ரிஷப் பந்த் இல்லாததால் டேவிட் வார்னர் தலைமையில் களமிறங்க உள்ளது. எதிர்பார்க்கப்படும் விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- டிசி அணி : சர்பராஸ் கான், மனிஷ் பாண்டே, ரோவ்மேன் பவல், ரிலீ ரோசோவ், ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர்(கேப்டன்), மிட்செல் மார்ஷ், அக்சர் படேல், கலீல் அகமது, குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா எல்எஸ்ஜி அணி : கே.எல்.ராகுல் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, ஆயுஷ் படோனி, நிக்கோலஸ் பூரன், அவேஷ் கான், மார்க் வூட், ரவி பிஷ்னோய், ஜெய்தேவ் உனட்கட்
இந்த காலவரிசையைப் பகிரவும்