ஐபிஎல் 2023 குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் : முக்கிய வீரர்களின் ஒப்பீடு
செய்தி முன்னோட்டம்
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் முதல் வெற்றியைப் பெறும் என்று நம்புகிறது.
இரு அணிகளிலும் நட்சத்திர மற்றும் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய அபாயகரமான வீரர்கள் உள்ளனர்.
அத்தகைய வீரர்கள் குறித்த ஒப்பீடு பின்வருமாறு:-
டேவிட் வார்னர் vs முகமது ஷமி
ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் 5,937 ரன்கள் குவித்துள்ளார். அவர் 6,000 ரன்களை எட்டுவதற்கு 63 ரன்கள் மட்டுமே குறைவாக உள்ளார்.
எனினும் 15 டி20 போட்டிகளில் ஷமி 5 முறை வார்னரை அவுட்டாக்கியுள்ளதால், இந்த போட்டியில் வார்னருக்கு ஷமியிடமிருந்து சிக்கல் வரலாம்.
குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ்
சுப்மான் கில் vs கலீல் அகமது ஒப்பீடு
ஷுப்மான் கில் கடந்த சீசனில் 483 ரன்களுடன் குஜராத் அணிக்காக இரண்டாவது அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார்.
இதேபோல், டெல்லி அணியின் கலீல் அகமது கடந்த சீசனில் 10 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை எடுத்தார்.
இருவரும் 4 போட்டிகளில் நேருக்கு நேர் எதிர்கொண்ட நிலையில், கில் 38 ரன்கள் எடுத்துள்ளார். கலீல் அவரை இரண்டு முறை ஆட்டமிழக்கச் செய்தார்.
ஹர்திக் பாண்டியா vs குல்தீப் யாதவ்
மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா முக்கியமானவராக இருப்பார். அவர் மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்துவார்
ஆனால் 2022ஆம் ஆண்டு மிடில் ஓவரில் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்று பந்துவீச்சாளர்களில் ஒருவராக உள்ள குல்தீப்பை எதிர்கொள்வது பாண்டியாவுக்கு சிக்கலாகவே இருக்கும்.