அடுத்த செய்திக் கட்டுரை

"Idhu namma all'u!" : வலுவான ஆல்ரவுண்டர் காம்போவை வித்தியாசமாக அறிமுகப்படுத்திய சிஎஸ்கே
எழுதியவர்
Sekar Chinnappan
Mar 29, 2023
05:43 pm
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), நான்கு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பட்டங்களை தங்கள் வசம் கொண்டு வலுவான அணியாக இருந்தாலும், 2022 தொடரில் படுதோல்வியுடன் வெளியேறியது.
இந்நிலையில், ஐபிஎல் 2023 ஏலத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸை அதிக தொகைக்கு கையகப்படுத்தியது.
இதன் மூலம் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயீன் அலியுடன் பென் ஸ்டோக்ஸ் என மூன்று ஆல் ரவுண்டர் இருப்பதால், அணியின் வலிமை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஸ்டோக்ஸ், மொயீன் அலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே தனது சமூக ஊடக பக்கங்களில் "Idhu namma all'u!" என வித்தியாசமாக பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை சூப்பர் கிங்ஸ் ட்வீட்
Idhu namma all'u!#AllRoundersUnion 🦁💛 pic.twitter.com/KZwFPZU4Kc
— Chennai Super Kings (@ChennaiIPL) March 28, 2023