Loading...
கிரிக்கெட்டின் தாயகத்தில் இந்திய மகளிரின் அபார சாதனை! லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை கதறவிட்ட ஹர்மன்பிரீத் படை
லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி

கிரிக்கெட்டின் தாயகத்தில் இந்திய மகளிரின் அபார சாதனை! லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை கதறவிட்ட ஹர்மன்பிரீத் படை

எழுதியவர் Sekar Chinnappan
Jul 13, 2026
06:47 pm

செய்தி முன்னோட்டம்

அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாமல் ஏமாற்றமளித்த இந்திய கிரிக்கெட் அணி, தற்பொழுது கிரிக்கெட்டின் தாயகமாகக் கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் மறக்க முடியாத உலக சாதனையைப் படைத்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தின் 212 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்பட்ட மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தியுள்ளது.

பேட்டிங் பலம்

இந்திய பேட்டிங் வரிசையின் அசைக்க முடியாத பலம்

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஸ்மிருதி மந்தனாவின் சிறப்பான ஆட்டத்தால் (83 ரன்கள்) 285 ரன்கள் குவித்தது.

கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (58) மற்றும் ரிச்சா கோஷ் (57) ஆகியோரும் அரைசதம் அடித்துப் பலம் சேர்த்தனர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனை கராந்தி கௌடின் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 170 ரன்களுக்கு சுருண்டது.

இதன் மூலம் லார்ட்ஸ் கௌரவப் பலகையில் இடம் பிடித்த முதல் பெண் பந்துவீச்சாளர் என்ற சாதனையை கராந்தி படைத்தார்.

யாஸ்திகா பாட்டியா

யாஸ்திகா பாட்டியாவின் சாதனையும் இமாலய இலக்கும்

முதல் இன்னிங்ஸில் 115 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி 341 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த போது டிக்ளேர் செய்தது.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஸ்திகா பாட்டியா 158 பந்துகளில் 113 ரன்கள் எடுத்துத் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.

இதன் மூலம் லார்ட்ஸ் கௌரவப் பலகையில் இடம்பிடித்த முதல் பெண் பேட்டர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

இதன் விளைவாக, இங்கிலாந்து அணிக்கு 457 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ADVERTISEMENT

சுழலில் சுருண்ட இந்தியா

சுழலில் சுருண்ட இங்கிலாந்து மற்றும் இந்திய அணியின் அபார டெஸ்ட் சாதனை

மிரட்டலான இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியின் சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 186 ரன்களுக்கு ஒட்டுமொத்தமாக சுருண்டது.

இந்தியாவின் சினே ரானா 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா, சாயலி சத்காரே மற்றும் கராந்தி கௌட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வரலாற்று வெற்றிக்கு வித்திட்டனர்.

கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் சந்தித்த தோல்விக்குப் பிறகு, இந்திய அணி மீண்டும் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

ADVERTISEMENT

ஆதிக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று ஆதிக்கம்

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்திய மகளிர் அணி விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

மேலும், 1995 ஆம் ஆண்டிற்குப் பிறகு இங்கிலாந்திற்கு எதிராக இந்திய அணி ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கூட தோற்றதில்லை என்ற பெருமையையும் தக்கவைத்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இரு அணிகளுக்கும் இடையே நடந்துள்ள 16 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 4 வெற்றிகளையும், இங்கிலாந்து ஒரே ஒரு வெற்றியையும் பெற்றுள்ளன.

11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் பெற்ற 4வது மிகப்பெரிய வெற்றியாகவும், ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியின் சாதனையாகவும் இந்த லார்ட்ஸ் பெருவெற்றி பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT