CT 2025: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா போட்டியில் தவறுதலாக இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம்
செய்தி முன்னோட்டம்
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சனிக்கிழமை (பிப்ரவரி 22) ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து இடையேயான போட்டி, லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டி தொடங்கும்போது, தவறுதலாக இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு, ஆஸ்திரேலியாவின் முறை வரும்போது இந்த சம்பவம் நடந்தது.
'அட்வான்ஸ் ஆஸ்திரேலியா ஃபேர்' என்பதற்குப் பதிலாக, இந்திய தேசிய கீதம் 'ஜன கன மன' என்று தொடங்கியது, வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதற்கிடையில், இந்த தவறு பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வைரல்
சமூக ஊடங்களில் வைரல்
லாகூரில் இந்திய தேசிய கீதம் எதிர்பாராத விதமாக இசைக்கப்பட்டது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
நெட்டிசன்கள் நிலைமை குறித்து தங்கள் நகைச்சுவையான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பாகிஸ்தான் இந்தியாவை மிஸ் செய்கிறது என்று சிலர் கிண்டலாக கூறி பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த வார தொடக்கத்தில் தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில், ஏற்கனவே மூன்று போட்டிகள் முடிந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் நடைபெற உள்ளது.
வரலாற்று நிகழ்வு
பாகிஸ்தானில் 29 ஆண்டுகளில் நடக்கும் முதல் பெரிய ஐசிசி போட்டி
இதற்கிடையில், நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானுக்கு ஒரு மைல்கல் ஆகும். அவர்கள் 29 ஆண்டுகளில் முதல் பெரிய ஐசிசி போட்டியை நடத்துகிறார்கள்.
கடைசியாக 1996 உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து நடத்தியது.
இதுவரை, நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் தங்கள் குரூப் ஏ போட்டிகளில் முறையே பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளன.
அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா தங்கள் குரூப் பி தொடக்க போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடங்கியது.
சனிக்கிழமை போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் பென் டக்கட் சதம் மற்றும் ஜோ அரைசதத்துடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.