Page Loader
INDvsAUS ODI World Cup Final : போட்டி தொடங்கும் முன் இந்திய விமானப்படையின் கண்கவர் ஏர் ஷோ நடத்த திட்டம்
இந்திய விமானப்படையின் கண்கவர் ஏர் ஷோ நடத்த திட்டம்

INDvsAUS ODI World Cup Final : போட்டி தொடங்கும் முன் இந்திய விமானப்படையின் கண்கவர் ஏர் ஷோ நடத்த திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 17, 2023
02:10 pm

செய்தி முன்னோட்டம்

நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழு அகமதாபாத் மைதானத்தில் கண்கவர் ஏர் ஷோவை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டேரா பகுதியில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன் சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழு பத்து நிமிடங்களுக்கு நிகழ்ச்சியை நடத்தும் என்று குஜராத்தின் பாதுகாப்புப்படை பிஆர்ஓ அறிவித்தார். மேலும், ஏர் ஷோவின் ஒத்திகை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் என்று பிஆர்ஓ அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையில் சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழு ஒன்பது விமானங்களைக் கொண்டுள்ளது மற்றும் இது நாடு முழுவதும் ஏராளமான கண்கவர் ஏர் ஷோக்களை நடத்தி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழுவின் எக்ஸ் பதிவு