ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் 1 தங்கம்
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று வரை 33 பதக்கங்களை இந்தியா வென்றிருக்கும் நிலையில், இன்று மேலும் இரு பதக்கங்களை வென்றிருக்கிறது. துப்பாக்கிச் சுடுதலில் இதுவரை 18 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா. இன்று அதே விளையாட்டின் கலப்பு இரட்டையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் சரப்ஜாட் சிங் மற்றும் திவ்யா டிஎஸ் இணையானது வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறது. அதேபோல், டென்னிஸ் விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் ருதுராஜ் போசாலே இணையானது தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட, தைவானைச் சேர்ந்த லியாங் லீ மற்றும் சங் ஹாவ் ஹூவாங்கை 2-6, 6-3 மற்றும் 10-4 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றது.