
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு வெண்கலம்
செய்தி முன்னோட்டம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறது இந்தியா. இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கணைகளான அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி இணையானது, அரையிறுதிச் சுற்றில் தென் கொரியைவை எதிர் கொண்டது.
அரையிறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இறுதிலிய் 4-3 என்ற விளையாட்டுக் கணக்கில் தென் கொரிய அணியிடம் தோல்வியைத் தழுவி வெண்கலப் பதக்கத்தை வென்று இந்த இணை.ட
முன்னதாக, காலிறுதிச் சுற்றில் சீனாவைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் இணையான மெங் செங் மற்றும் யிடி வாங் இணையை தோற்கடித்து அசத்தியிருந்தது இந்த இந்திய இணை.
ஒட்டுமொத்தமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்தியாவிற்கு இது மூன்றாவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
டேபிள் டென்னிஸில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம்:
BRONZE 🥉
— SATHISH POOJARY Jayakarnataka (@SJayakarnataka) October 2, 2023
Ayhika Mukjerjee and Sutirtha Mukherjee win Bronze in Table Tennis - Women's Doubles! 🇮🇳💙
They went down 3-4 to the North Koreans in the semi-finals!
Chin up girls, India is proud of you. Into the history books of Indian Table Tennis! ❤️#AsianGames2022 #AsianGames pic.twitter.com/qMCYAz3ir5