Page Loader
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு தொடர்கள்; இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக போட்டி அட்டவணை வெளியீடு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக போட்டி அட்டவணை வெளியீடு

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு தொடர்கள்; இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக போட்டி அட்டவணை வெளியீடு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 28, 2023
09:05 am

செய்தி முன்னோட்டம்

மகளிர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மோதும் இருதரப்பு உள்நாட்டு தொடர்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) வெளியிட்டுள்ளது. இந்த இரு தொடர்களும், மகளிர் கிரிக்கெட்டில் மிகப்பெரும் உள்நாட்டு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த இரண்டு தொடர்களுக்கு முன்னதாக, மகளிர் இந்தியா ஏ அணி இங்கிலாந்து ஏ அணியுடன் மோதும் மூன்று டி20 போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து ஏ அணியுடன் மோதும் மூன்று டி20 போட்டிகளும் மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 29, டிசம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

India women cricket schedule for Eng and Aus series

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாஉடனான போட்டி அட்டவணை

ஏ அணிகளின் மோதலைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. டி20 போட்டிகள் முறையே டிசம்பர் 6, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிலையில், டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி தொடங்க உள்ளது. இங்கிலாந்து கிளம்பிய பிறகு இந்தியா வரும் ஆஸ்திரேலியா டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், ஜனவரி 5, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்கும் மூன்று டி20 போட்டிகளிலும் பங்கேற்கிறது.