CT 2025: சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை மூன்றாவது முறையாக வென்று இந்திய கிரிக்கெட் அணி சாதனை
செய்தி முன்னோட்டம்
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெற்ற 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது.
நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தாலும், இந்திய சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள திணறியது.
இதனால், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. டேரில் மிட்செல் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார்.
இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியா வெற்றி
த்ரில் வெற்றி பெற்ற இந்தியா
252 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஜோடியான ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் முதல் விக்கெட்டிற்கு 105 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
ரோஹித் ஷர்மா 76 ரன்களும், ஷுப்மன் கில் 31 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அவுட்டாகினர்.
விராட் கோலியும் 1 ரன்னில் வெளியேற, அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தது.
இதனால், 49வது ஓவர் வரை போராடிய இந்திய அணி இறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்று, இந்த பட்டத்தை அதிகமுறை வென்ற அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.