LOADING...
அமெரிக்காவைத் தொடர்ந்து நமீபியா; டெல்லியில் கெத்து காட்டப்போகும் சூர்யகுமார் படை; இந்தியாvsநமீபியா போட்டி குறித்த முழு விவரம்
டி20 உலகக்கோப்பை 2026: இந்தியாvsநமீபியா மோதல் விவரங்கள்

அமெரிக்காவைத் தொடர்ந்து நமீபியா; டெல்லியில் கெத்து காட்டப்போகும் சூர்யகுமார் படை; இந்தியாvsநமீபியா போட்டி குறித்த முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 09, 2026
10:59 am

செய்தி முன்னோட்டம்

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையின் குரூப்-ஏ பிரிவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொள்கிறது. முன்னதாக நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில், 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறிய இந்திய அணியைக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் (84*) அதிரடியாக விளையாடி மீட்டெடுத்தார். இறுதியில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியின் அனுபவங்களைக் கொண்டு, நமீபியாவிற்கு எதிராக ஒரு வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி தயாராகி வருகிறது.

போட்டி விவரம்

போட்டி நடைபெறும் நாள் மற்றும் இடம்

இந்தியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானத்தில் நடைபெற உள்ளது: தேதி: பிப்ரவரி 12, 2026 (வியாழக்கிழமை) நேரம்: இந்திய நேரப்படி இரவு 7:00 மணி மைதானம்: அருண் ஜெட்லி மைதானம், டெல்லி

அணி

இந்திய மற்றும் நமீபியா அணி விவரங்கள்

இரு அணிகளும் தங்களது சிறந்த வீரர்களுடன் களமிறங்க உள்ளன: இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ரின்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர். நமீபியா: ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), ஜேன் கிரீன், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ், ரூபன் ட்ரம்பெல்மேன், ஜேஜே ஸ்மிட், ஜான் ஃப்ரைலின்க், லூரன் ஸ்டீன்காம்ப், மலான் க்ரூகர், நிகோல் லோஃப்டி-ஈடன், ஜாக் ப்ராசெல், பென் ஷிகோங்கோ, ஜேசி பால்ட், டிலான் லீச்சர், டபிள்யூபி ஹெரிங்பர்க், மேக்ஸ்பி ஹெரிங்பர்க். (ரிசர்வ்: அலெக்சாண்டர் வோல்சென்க்).

Advertisement

நேரலை

நேரலை மற்றும் ஒளிபரப்புத் தகவல்கள்

கிரிக்கெட் ரசிகர்கள் இந்தப் போட்டியைப் பின்வரும் ஊடகங்களில் நேரலையாகக் காணலாம்: தொலைக்காட்சி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பப்படும். ஆன்லைன் நேரலை: ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் நேரலையாகப் பார்க்கலாம்.

Advertisement