
இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20Iக்கான வானிலை அறிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1) நான்காவது ஆட்டம் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு, கவுகாத்தியில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா பாராட்டத்தக்க வகையில் மீண்டு வந்தது.
இதனால், நான்காவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி களமிறங்க உள்ளது.
India vs Australia 4th T20I weather report
ராய்ப்பூரில் வானிலை நிலவரம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது மழை அச்சுறுத்தல் இல்லை.
போட்டியின் போது 20 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு வெப்பநிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாலையில் ஈரப்பதம் 50% அளவிற்கு இருக்கும்.
போட்டிக்கு மழை குறுக்கிட வாய்ப்பில்லை மற்றும் தொடர் கத்தி முனையில் இருப்பதால் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு இது ஒரு சிறந்த போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மைதானத்தில் விளையாடிய 29 டி20 போட்டிகளில் சேஸிங் அணிகள் 16ல் வெற்றி பெற்றுள்ளன. டியூவும் ஒரு முக்கிய பங்கை வகிக்க முடியும் மற்றும் டாஸ் வென்ற கேப்டன் முதலில் பந்துவீச விரும்பலாம்.