INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவை 269 ரன்களில் சுருட்டியது இந்தியா
சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. குறிப்பிடத்தக்க வகையில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் யாரும் 50 ரன்களைத் தொடவில்லை. மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 47 ரன்கள் இருந்தார். ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் பகிர்ந்து கொண்டனர். 270 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
முதல் இன்னிங்ஸ் ஹைலைட்ஸ்
மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ரன்களை எட்டினார். தனது 72வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய மார்ஷ் தற்போது 34.62 சராசரியுடன் 2,008 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா 68/1 என்று இருந்தபோது கிரீஸில் வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 13வது ஓவரில் பாண்டியாவால் ஆட்டமிழந்தார். இதன் மூலம் பாண்டியா தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்மித்தை 5 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் அடில் ரஷித் மட்டுமே ஸ்மித்தை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார் (6).