Page Loader
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஆறாம் நாள் முடிவில் 33 பதக்கங்களை வென்றிருக்கும் இந்தியா
ஆறாம் நாள் முடிவில் 33 பதக்கங்களை வென்றிருக்கும் இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஆறாம் நாள் முடிவில் 33 பதக்கங்களை வென்றிருக்கும் இந்தியா

எழுதியவர் Prasanna Venkatesh
Sep 29, 2023
09:51 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று துப்பாக்கிச் சுடுதல் மற்றும் டென்னிஸைத் தொடர்ந்து, ஸ்குவாஷ் மற்றும் குண்டு எறிதல் விளையாட்டுக்களிலும் இரண்டு பதக்கங்களைக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. ஸ்குவாஷ் விளையாட்டில், ஜோஷ்வா சின்னப்பா, தான்வி கண்ணா மற்றும் அனாஹத் சின்ஹா ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணியானது, ஹாங்காங்கிடம் தோல்வியுற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது. அதேபோல், குண்டு எறிதலில் இந்திய வீராங்கணை கிரண் பலியான் 17.36 புள்ளிகளுடன் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். இந்த பதக்கத்துடன், தடகளத்தில் பதக்க வேட்டையைத் துவக்குகிறது இந்தியா. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆறாம் நாள் முடிவில் 8 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களுடன் 33 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது இந்தியா.

embed

தடகளத்தில் பதக்க வேட்டையைத் துவக்கிய இந்தியா:

Kiran Baliyan gets bronze in shot put, opens India's account in track and field events at Hangzhou Asian Games Read @ANI Story | https://t.co/YYTvdloARI#AsianGames2023 #ShotPut #India pic.twitter.com/02vk9ZWJre— ANI Digital (@ani_digital) September 29, 2023