முடிவுக்கு வந்தது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி; 111 பதக்கங்களுடன் நிறைவு செய்த இந்தியா
சீனாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் கடைசி நாளில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் யாதவ் மற்றும் தடகள வீரர் திலீப் காவிட் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்று சிறப்பாகத் தொடங்கினர். செஸ் வீரர் டிராபன் இனானியும் மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை வெல்ல, இந்தியா மொத்தம் 111 பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்துள்ளது. இதில் 29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். முன்னதாக, 2018இல் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 72 பதக்கங்களை வென்றதே இந்தியாவின் சாதனையாக இருந்த நிலையில், இந்த முறை அது முறியடிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 111 பதக்கங்களுடன், இந்தியா பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.