
'உலகக்கோப்பை நமக்கு தான்' ; அடித்துச் சொல்லும் முன்னாள் கேப்டன் கபில்தேவ்
செய்தி முன்னோட்டம்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணியாக இந்தியா இருக்கும் என கணித்துள்ளார்.
வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் ஒரு கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
இந்நிலையில், ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியின் வாய்ப்புகள் குறித்து பிடிஐக்கு அளித்த பேட்டியில், "இது எப்படி முடிவடையும் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் (இந்திய அணி) இன்னும் உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்கவில்லை.
நீண்ட காலமாக இந்தியா எப்போதுமே போட்டியில் விரும்பப்படும் அணிகளில் ஒன்றாக நுழையும்." என்று கபில்தேவ் தெரிவித்துளளார்.
kapildev warns players fitness
உடற்தகுதி குறித்து வீரர்களுக்கு கபில்தேவ் அட்வைஸ்
கபில்தேவ் தனது பேட்டியில் மேலும், "அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்பார்ப்புகளுடன் அணி எவ்வாறு ஒத்துப்போகிறது என்பதைப் பற்றியது.
சொந்த மண்ணில் நாம் உலகக் கோப்பையை வென்றுள்ளோம். அணிக்கு யார் தேர்வுசெய்யப்பட்டாலும், இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் கோப்பையை வெல்லும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்." என்று கூறினார்.
இந்த சகாப்தத்தில் வீரர்கள் விளையாடும் கிரிக்கெட்டின் அளவைக் கருத்தில் கொண்டு, பணிச்சுமை மற்றும் காயத்திற்கான மேலாண்மைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கபில்தேவ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து பேசிய அவர், தனது காலத்தில் போட்டிகள் குறைவாக இருந்ததாகவும், தற்போது வருடத்திற்கு 10 மாதங்கள் கிரிக்கெட் விளையாடுவதால் வீரர்கள் உடற்தகுதியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.