ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணி; அணிகளுக்கு கிடைத்த பரிசுத் தொகைகளின் முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பட்டத்தை இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது.
மதிப்புமிக்க சாம்பியன்ஸ் டிராபி கோப்பையுடன், இந்தியா ரூ.20 கோடி ($2.24 மில்லியன்) பரிசுத் தொகையையும் பெற்றது.
அதே நேரத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்த நியூசிலாந்து ரூ.12 கோடி ($1.12 மில்லியன்) பெற்றது. போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை $6.9 மில்லியன் (ரூ.60 கோடி) ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அணிகளுக்கு அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் கணிசமான அளவிற்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டன. இதன்படி அரையிறுதியில் தோற்று வெளியேறிய இரண்டு அணிகளும் தலா ரூ.4.6 கோடி ($560,000) பெற்றனர்.
பரிசுத் தொகை
போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் பணம்
ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.2.9 கோடி ($350,000) வழங்கப்பட்டன.
ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தைப் பிடித்த அணிகள் தலா ரூ.1.1 கோடி ($140,000) சம்பாதித்தன.
கூடுதலாக, போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ.1 கோடி ($125,000) பரிசு உறுதி செய்யப்பட்டது. தவிர, குரூப் ஆட்டங்களில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு ரூ.28 லட்சம் ($34,000) போனஸும் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை, இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என ஒயிட்பால் கிரிக்கெட்டில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளது.
இதற்கிடையே, அடுத்த சாம்பியன்ஸ் டிராபி 2029இல் இந்தியாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.