
பெங்களூர் கால்பந்து கிளப் அணியுடனான ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடம் நீட்டித்தார் சுனில் சேத்ரி
செய்தி முன்னோட்டம்
தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி திங்களன்று (ஜூலை 3) பெங்களூர் கால்பந்து கிளப் அணியுடன் புதிய ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
பெங்களூர் காண்டிவாரா ஸ்டேடியத்தில் நடந்த அரையிறுதி போட்டியின்போது, சுனில் சேத்ரி அணியில் தொடர்வது குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், தற்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள தகவலை பெங்களூர் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2013 இல் கிளப் தொடங்கப்பட்ட நேரத்தில் கிளப் கேப்டனாக சேர்ந்த சேத்ரி, தற்போதுவரை அந்த அணியிலேயே விளையாடி வருகிறார்.
இந்த காலகட்டத்தில், அவர் ஐ-லீக், ஃபெடரேஷன் கோப்பை, சூப்பர் கோப்பை, இந்தியன் சூப்பர் லீக் மற்றும் டுராண்ட் கோப்பையை வென்றுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ஒப்பந்தத்தை ஒரு வருடம் நீட்டித்தார் சுனில் சேத்ரி
About last night. ✨
— Bengaluru FC (@bengalurufc) July 2, 2023
RT if you still can't get over this moment! 😍#KingOfKanteerava #WeAreBFC pic.twitter.com/bXbaB0rlpX