LOADING...
INDvsSA முதல் ODI: கடைசி வரை போராடிய தென்னாப்பிரிக்கா; 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி
17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி

INDvsSA முதல் ODI: கடைசி வரை போராடிய தென்னாப்பிரிக்கா; 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Dec 01, 2025
08:28 am

செய்தி முன்னோட்டம்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் சதம் (135 ரன்கள்) இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற உதவியது. ஒருநாள் போட்டியில் கோலியின் எதிர்காலம் குறித்துக் கேள்வி எழுப்பியவர்களுக்கு அவரது 120 பந்துகளில் குவித்த 135 ரன்கள் சிறந்த பதிலாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு, கோலி மற்றும் ரோஹித் ஷர்மா (57 ரன்கள்) ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு 136 ரன்கள் குவித்து வலுவான அடித்தளத்தை அமைத்தனர். இறுதிக் கட்டத்தில் கே.எல்.ராகுல் 60 ரன்கள் எடுத்து அணி 349 ரன்கள் குவிக்க உதவினார்.

அச்சுறுத்தல்

தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் அச்சுறுத்தல்

350 ரன்கள் என்ற சவாலான இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்கா, ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் தொடக்க வேகப்பந்து வீச்சில் 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இருப்பினும், மேத்யூ ப்ரீட்ஸ்கே (72), மார்கோ ஜான்சன் (70), மற்றும் கார்பின் போஷ் (67) ஆகியோரின் துணிச்சலான ஆட்டங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தின. போஷ் இறுதி ஓவர் வரைப் போராடினார். கடைசிக் கட்டத்தில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பிரசித் கிருஷ்ணா வீசிய ஓவரில் போஷ் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்று, விராட் கோலியின் சதத்தை வீணாகாமல் பாதுகாத்தது. மேலும், தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement