இந்தியா-ஆஸ்திரேலியா பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடங்குகிறது: ரோஹித் ஷர்மா ஓப்பனிங் பேட்ஸ்மேனா?
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் நடக்கும் 5 டெஸ்ட் போட்டிகளின் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் தற்போது விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பிறகு அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் டிராவாக முடிந்தது. இதன் மூலம் தொடர் 1-1 என சமமாக உள்ள நிலையில், 4வது டெஸ்ட் மெல்போர்னில் நாளை பாக்சிங் டே டெஸ்ட் என தொடங்குகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை பிடிக்க விரும்புகிறது. இதில் இந்திய அணியிலிருந்து கேப்டன் ரோஹித் ஷர்மா ஓபன்னிங் பேட்ஸ்மேனாக களமிறங்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
Twitter Post
சீனியர் வீரர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள்
பெர்த்தில் ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி சதங்களை எட்டினாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் இவர்கள் குறைந்த ரன்களில் அவுட் ஆனார்கள். கே.எல்.ராகுல் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 6 இன்னிங்சில் 235 ரன்களை எடுத்துள்ளார். ரிஷப் பன்ட் எதிர்பார்ப்புக்கேற்ப செயல்படவில்லை. கேப்டன் ரோஹித் ஷர்மாவோ 3 இன்னிங்சில் 19 ரன்களையே எடுத்துள்ளார். இதனால் ஏற்கனவே பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நாளை அவர் நாளை முதல் பேட்ஸ்மேனாக களமிறங்கவுள்ளது எதிர்பார்ப்பையும் விமர்சனங்களையும் ஒரு சேர ஈர்க்கிறது.
ஆஸ்திரேலியாவிற்கும் இக்கட்டான சூழல்
ஆஸ்திரேலிய அணி, சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங் பிரிவில், டிராவிஸ் ஹெட் 2 சதங்களுடன் 409 ரன்கள் எடுத்துள்ளார். ஆரம்ப வீரர்களான கவாஜா மற்றும் மிட்செல் மார்ஷ், அதிக ரன்கள் அடிக்க கட்டாயத்தில் உள்ளனர். இந்திய அணி டெஸ்ட் சாம்பியன் ஷிப்பின் பைனலுக்கு தகுதி பெற, எஞ்சிய 2 டெஸ்ட்டிலும் வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலியா, கடந்த 2 டெஸ்ட்களில் தோல்வி அடைந்ததால், இந்த டெஸ்டில் தோல்வி அடைந்தால் 3வது முறையாக கோப்பையை இழக்கலாம். 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மெல்போர்ன் மைதானத்தில், ஆஸ்திரேலியா 116 டெஸ்ட்களில் 67 முறை வென்றுள்ளது. இந்தியா இங்கு 14 டெஸ்ட்களில் 4 முறை வெற்றிபெற்றுள்ளது.