Page Loader
கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு! பிரதமர் மோடிக்கு ஜடேஜா புகழாரம்!
பிரதமர் மோடிக்கு ஜடேஜா புகழாரம்

கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு! பிரதமர் மோடிக்கு ஜடேஜா புகழாரம்!

எழுதியவர் Sekar Chinnappan
May 16, 2023
06:11 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவும் அவரது மனைவி ரிவாபா ஜடேஜா எம்எல்ஏவும் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். மோடியுடன் இருக்கும் புகைப்படத்தை ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு பிரதமர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர். ஜடேஜா தனது ட்விட்டர் பதிவில், "எங்கள் தாய்நாட்டிற்கான கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! நீங்கள் தொடர்ந்து அனைவருக்கும் சிறந்த முறையில் ஊக்கமளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முடிந்தவரை சிறந்த முறையில் அனைவரையும் ஊக்குவிப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார். ஜடேஜாவின் மனைவி ரிவாபா குஜராத்தில் பாஜக எம்எல்ஏவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post