NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆர்சிபி ரசிகரின் கோரிக்கையும் இணையத்தைக் கலக்கிய எம்.எஸ்.தோனியின் பதிலும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆர்சிபி ரசிகரின் கோரிக்கையும் இணையத்தைக் கலக்கிய எம்.எஸ்.தோனியின் பதிலும்
    ஆர்சிபி ரசிகரின் கோரிக்கையும் இணையத்தைக் கலக்கிய எம்.எஸ்.தோனியின் பதிலும்

    ஆர்சிபி ரசிகரின் கோரிக்கையும் இணையத்தைக் கலக்கிய எம்.எஸ்.தோனியின் பதிலும்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 21, 2023
    01:08 pm

    செய்தி முன்னோட்டம்

    2024ம் ஆண்டு ஐபிஎல்லுக்கான ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை வாங்கியிருக்கும் நிலையில், தோனி மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையிான சந்திப்பு ஒன்று நிகழ்ந்திருக்கிறது.

    இந்த சந்திப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் ஸ்டார் வீரருமான தோனியிடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர் ஒரு வைத்த கோரிக்கையும், அதற்கு தோனி அளித்த பதிலும் அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

    அந்தக் உரையாடலில், "சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறீர்கள், அதேபோல் ஆர்சிபி அணிக்கு வந்து ஆர்சிபிக்காக ஒரு கோப்பையை வென்று கொடுக்க முடியுமா?" எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் ஆர்சிபி ரசிகர் ஒருவர்.

    தோனி

    மகேந்திர சிங் தோனியின் பதில்: 

    ஆர்சிபி ரசிகரின் கோரிக்கைக்கு தோனி அளித்த பதிலே தற்போது இணையத்தில் பலராலும் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

    ஆர்சிபி ரசிகரின் கோரிக்கைக்கு, "ஆர்சிபி ஒரு சிறந்த அணி. ஐபிஎல்லில் கலந்து கொள்ளும் 10 அணிகளுக்குமே கோப்பை வெல்லும் வாய்ப்பு சரிசமமாகவே இருக்கிறது.

    அனைத்து அணிகளும் வலுவாகவே இருக்கின்றன. ஆனால், சில குறிப்பிட்ட வீரர்கள் காயம் காரணமாக அணியில் இருந்து விலகும் போது தான் பிரச்சினை உருவாகிறது." எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "என்னுடைய அணியிலேயே நான் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. அத்துடன் இந்த நேரத்தில் நான் வேறு ஒரு அணிக்கு சென்றால், எங்கள் ரசிகர்களுடைய மனநிலை எப்படி இருக்கும்?" எனத் தெரிவித்திருக்கிறார் 'தல' தோனி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எம்எஸ் தோனி
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2024
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    எம்எஸ் தோனி

    முழங்கால் வலிக்காக அறுவை சிகிச்சை செய்கிறாரா எம்எஸ் தோனி? சிஎஸ்கே காசி விஸ்வநாதன் விளக்கம்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    கையில் பகவத் கீதையுடன் இருக்கும் எம்எஸ் தோனி! வைரலாகும் புகைப்படம்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    எம்எஸ் தோனிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது! விரைவில் வீடு திரும்புவார் என தகவல்! ஐபிஎல்
    யார் இந்த ஷீலா சிங்? ரூ.800 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் சிஇஓவாக கலக்கும் எம்எஸ் தோனியின் மாமியார் சென்னை சூப்பர் கிங்ஸ்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    'இது தான் எனது கடைசி போட்டி' : ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்தார் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு! ஐபிஎல்
    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : கடைசி பந்துவரை திக்திக்! குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஐந்தாவது பட்டத்தை கைப்பற்றியது சிஎஸ்கே! ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : விருது வென்றவர்களின் முழு பட்டியல் ஐபிஎல்
    'Man with a Plan' : ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற தல தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! ஐபிஎல்

    ஐபிஎல் 2024

    IPL 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிரிட்டோரியஸ் விலகல் ஐபிஎல்
    IPL 2024 : எம்எஸ் தோனியை அணியில் தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் எம்எஸ் தோனி
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இந்தியா vs ஆஸ்திரேலியா
    IPL 2024 : அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் ஐபிஎல்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிடல்ஸ் : கடந்த கால புள்ளி விபரங்கள் டெல்லி கேப்பிடல்ஸ்
    சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக விராட் கோலியின் புள்ளி விபரங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்
    இதே நாளில் அன்று : டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து கிறிஸ் கெயில் சாதனை டி20 கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025