
லாவண்டர் ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! காரணம் இது தான்!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 சீசனில் 62வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் குஜராத் டைட்டன்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் செல்லும் முதல் அணி என்ற வாய்ப்பை பெறும் முனைப்புடன் உள்ளது.
இந்நிலையில் திங்கட்கிழமை (மே 15) குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் புதிய கிட் அணிந்து காணப்பட்டனர்.
2022 இல் அறிமுகமான சீசனில் இருந்து அவர்கள் அணிந்திருந்த வழக்கமான நீல நிற ஜெர்சிக்கு பதிலாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த லாவெண்டர் ஜெர்சி அணிந்து விளையாடுகிறது.
புற்றுநோய் விழிப்புணர்வுக்காக லாவெண்டர் ஜெர்சியை அணியும் முதல் ஐபிஎல் அணி குஜராத் டைட்டன்ஸ் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டில், டெல்லி கேப்பிடல்ஸ் இதேபோன்ற ஒரு முயற்சியை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
A 𝙨𝙥𝙚𝙘𝙞𝙖𝙡 initiative, a 𝙨𝙥𝙚𝙘𝙞𝙖𝙡 gesture, let's make it a 𝙨𝙥𝙚𝙘𝙞𝙖𝙡 𝙚𝙫𝙚𝙣𝙞𝙣𝙜 💜#GTvSRH | #AavaDe | #TATAIPL 2023 pic.twitter.com/7FtG7Ffatu
— Gujarat Titans (@gujarat_titans) May 15, 2023