
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு இந்திய முறைப்படி வளைகாப்பு
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவிக்கு பாரம்பரிய இந்திய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனுடன் கிளென் மேக்ஸ்வெல் மார்ச் 18, 2022இல் திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணம் ஆஸ்திரேலிய முறைப்படி ஒருமுறை மற்றும் பாரம்பரிய இந்திய முறைப்படி ஒருமுறை என மொத்தம் இரண்டு முறை நடந்தது.
ஐபிஎல் 2023 சீசன் போட்டிக்கு முன், மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன், தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் வினி ராமன் இந்திய முறைப்படி நடந்த தனது வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திங்கட்கிழமை (ஜூலை 24) பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் மேக்ஸ்வெல்-வினி ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவிக்கு வளைகாப்பு
க்ளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினிக்கு இந்திய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது! #SunNews | #Babyshower | #GlennMaxwell pic.twitter.com/qGIrNEhSXW
— Sun News (@sunnewstamil) July 24, 2023