LOADING...
2026 கால்பந்து உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக ஜெர்மனி புறக்கணிப்பு? விளையாட்டிலும் சூடுபிடிக்கும் அரசியல்
2026 கால்பந்து உலகக்கோப்பையை அமெரிக்காவுக்கு எதிராக புறக்கணிக்க ஜெர்மனி வலியுறுத்தல்

2026 கால்பந்து உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக ஜெர்மனி புறக்கணிப்பு? விளையாட்டிலும் சூடுபிடிக்கும் அரசியல்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 25, 2026
11:17 am

செய்தி முன்னோட்டம்

2026 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து தீவைக் கைப்பற்ற முயற்சிப்பதைக் கண்டித்து, இந்த உலகக்கோப்பையை ஐரோப்பிய நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று ஜெர்மனி கால்பந்து சங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனி கால்பந்து சங்கத்தின் 10 துணைத் தலைவர்களில் ஒருவரான ஓக் கோட்லிச், ஹம்பர்கர் மோர்கன்போஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில் பின்வரும் காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

காரணங்கள்

ஓக் கோட்லிச் குறிப்பிடும் கரணங்கள்

இறையாண்மை மீதான தாக்குதல்: நேட்டோ அமைப்பில் உள்ள டென்மார்க்கின் ஒரு பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்கா வற்புறுத்திக் கைப்பற்ற நினைப்பது ஐரோப்பிய நாடுகளின் இறையாண்மைக்கு எதிரானது. வர்த்தகப் போர்: இந்த விவகாரத்தில் அமெரிக்காவை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது டிரம்ப் வரி விதிப்பு அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார். வரலாற்று உதாரணம்: 1980 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் படையெடுத்த போது, அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணித்தன. அதைவிட தற்போது நிலவும் அச்சுறுத்தல் பெரியது என்று அவர் வாதிடுகிறார்.

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடு

ஜெர்மனி கால்பந்து சங்கத்தின் இந்த அதிரடி அழைப்பு குறித்து மற்ற நாடுகள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன: பிரான்ஸ்: விளையாட்டு மற்றும் அரசியலைத் தனித்தனியாகப் பார்க்க விரும்புவதாகவும், உலகக்கோப்பையைப் புறக்கணிக்கும் எண்ணம் தற்போது இல்லை என்றும் பிரான்ஸ் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டென்மார்க்: கிரீன்லாந்து விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளது. மக்கள் கருத்து: ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், சுமார் 47 சதவீத மக்கள் அமெரிக்கா கிரீன்லாந்தை இணைத்தால் உலகக்கோப்பையைப் புறக்கணிப்பதை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

டிரம்ப்

ஃபிஃபா மற்றும் டிரம்ப்

சமீபத்தில் ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அமைதி பரிசு வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2026 உலகக்கோப்பையின் 104 போட்டிகளில் 78 போட்டிகள் அமெரிக்காவிலேயே நடைபெறவுள்ளன. ஒருவேளை ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பெரிய அணிகள் புறக்கணித்தால், அது உலகக்கோப்பையின் மதிப்பையும் வருவாயையும் கடுமையாகப் பாதிக்கும்.

Advertisement