
பார்முலா 4 கார் ரேஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்கு உதயநிதியை பாராட்டிய பிராவோ
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பார்முலா 4 கார் பந்தயம் கடந்த ஆக. 31-ம் தேதி சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர்1 என இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற கார் பந்தயத்தில், இரு பிரிவுகளின்கீழ் மொத்தம் 14 அணிகளில் 40 பேர் பங்கேற்றனர்.
இந்த போட்டிகளில் இங்கிலாந்து, போர்ச்சுகல், செக் குடியரசு, பெல்ஜியம், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், மலேசியா, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
நடந்து முடிந்த பார்முலா 4 கார் பந்தயம் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.
தற்போது CSK அணியின் முன்னாள் வீரர் ப்ராவோவும் தனது சமூக வலைத்தளத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை பாராட்டியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#SportsUpdate | சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டிய பிராவோ#SunNews | #ChennaiFormula4 | @Udhaystalin | @DJBravo47 pic.twitter.com/UC129rfHzd
— Sun News (@sunnewstamil) September 4, 2024