இரட்டை உலக சாதனைகளுடன் வரலாறு படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
செய்தி முன்னோட்டம்
வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரரான, இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் வாழ்க்கையில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை அடித்துள்ளார்.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ராஜ்கோட்டில் நடந்த தொடரின் மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தை எதிர்கொண்டது.
ஜெய்ஸ்வால் 3வது நாளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, சதம் அடித்தார். எனினும், சதத்தை எட்டிய உடனேயே ஓய்வு பெற்றார்.
4வது நாளில் ஷுப்மான் கில் ஆட்டமிழந்த பிறகு ஜெய்ஸ்வால் ஆடுகளத்திற்குத் திரும்பினார்.
அதனை தொடர்ந்து, டெஸ்ட் வாழ்க்கையில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை அடித்து அசத்தினார்.
கிரிக்கெட்
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடக்கும் சாதனை
ஜெய்ஸ்வால் தனது இரட்டை சதத்தை எட்டுவதற்கு முன், ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்(12) அடித்த வாசிம் அக்ரமின் சாதனையை சமன் செய்தார்.
1996ல் ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்காக அக்ரம் 12 சிக்ஸர்களை அடித்திருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஜெய்ஸ்வால் தற்போது இந்த சாதனையை சமன் செய்துள்ளார்.
ஒரே டெஸ்ட் தொடரில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த முதல் பேட்டர் ஜெய்ஸ்வால் ஆவார்.
இது 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ளது.