Loading...
ஃபிஃபா உலகக்கோப்பை 2026: முதன்முறையாக வெற்றியாளர்களுக்கு சாம்பியன்ஷிப் மோதிரங்கள்
ஃபிஃபா உலகக்கோப்பையில் முதன்முறையாக வெற்றியாளர்களுக்கு சாம்பியன்ஷிப் மோதிரங்கள்

ஃபிஃபா உலகக்கோப்பை 2026: முதன்முறையாக வெற்றியாளர்களுக்கு சாம்பியன்ஷிப் மோதிரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 17, 2026
07:01 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) தனது 96 ஆண்டுக்கால ஃபிஃபா உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு புதிய பரிசை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நியூஜெர்சி மெட்லைஃப் மைதானத்தில் ஜூலை 19 (இந்திய நேரப்படி ஜூலை 20 அதிகாலை) அன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் சாம்பியன் அணிக்கு, வழக்கமான உலகக்கோப்பை மற்றும் தங்கப் பதக்கங்களுடன் சேர்த்து பிரத்யேக சாம்பியன்ஷிப் மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன. அமெரிக்காவின் என்எஃஎல் மற்றும் என்பிஏ போன்ற விளையாட்டுத் தொடர்களில் பின்பற்றப்படும் இந்த பாரம்பரிய கலாச்சாரம் தற்பொழுது கால்பந்து உலகிலும் முதன்முறையாக அறிமுகமாகிறது.

வீரர்கள் மற்றும் ரசிகர்கள்

மொத்தம் 2,026 மோதிரங்கள்: வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கான விபரம்

இந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூரும் வகையில், நடப்பு ஆண்டைக் குறிக்கும் விதமாக மொத்தம் 2,026 எண்ணிக்கையிலான தனித்துவமாக எண்கள் பொறிக்கப்பட்ட மோதிரங்களை ஃபிஃபா தயாரிக்கவுள்ளது.

இதில் 30 மோதிரங்கள் மட்டுமே சாம்பியன் பட்டம் வெல்லும் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்குப் பிரத்யேகமாக ஒதுக்கப்படும்.

மீதமுள்ள 1,996 மோதிரங்கள் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் சேகரிப்பிற்காக அதிகாரப்பூர்வ உரிமம் பெற்ற தயாரிப்பாக விற்பனைக்குக் கொண்டு வரப்படவுள்ளது.

விநியோகம்

மோதிரத்தின் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் விநியோக முறை

ஒவ்வொரு மோதிரத்தின் ஒரு பக்கத்தில் புகழ்பெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை சின்னமும், மறுபக்கத்தில் வெற்றி பெறும் நாட்டின் பிரத்யேக அடையாளங்களும் செதுக்கப்பட்டிருக்கும்.

இறுதிப்போட்டி முடிந்தவுடன் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், சாம்பியன் அணியின் கேப்டன் மற்றும் தலைமைப் பயிற்சியாளருக்குத் தற்காலிக மோதிரங்கள் வழங்கப்படும்.

அதன் பின்னர், அணியின் 30 நபர்களுக்கும் பொருந்தும் வகையில் அளவுகள் எடுக்கப்பட்டு, நம்பகத்தன்மை சான்றிதழுடன் கூடிய நிரந்தர மோதிரங்கள் பிற்காலத்தில் அதிகாரப்பூர்வமாகப் பிளாக்ஸ்டோன் முறையில் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இறுதிப்போட்டி

60 ஆண்டுகளுக்குப் பிறகு அரங்கேறும் வரலாற்று மோதல்

கடந்த 1966 ஆம் ஆண்டு உலகக் கோப்பை குரூப் சுற்றிற்குப் பிறகு, உலகக் கோப்பை அரங்கில் சுமார் 60 ஆண்டுகள் கழித்து ஸ்பெயினும் அர்ஜென்டினாவும் தற்பொழுதுதான் முதன்முறையாக நேருக்கு நேர் சந்திக்கின்றன.

39 வயதான கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி மற்றும் ஸ்பெயினின் 19 வயது இளம் புயல் லாமின் யமால் ஆகிய இருவேறு தலைமுறை நட்சத்திரங்கள் மோதும் இந்த இறுதிப்போட்டி, உலகக் கால்பந்து வரலாற்றில் ஒரு மறக்க முடியாத காவியமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ADVERTISEMENT