Page Loader
2034 பிபா உலகக்கோப்பையை நடத்த சவூதி அரேபியா தேர்வு
2034 பிபா உலகக்கோப்பையை நடத்த சவூதி அரேபியா தேர்வு

2034 பிபா உலகக்கோப்பையை நடத்த சவூதி அரேபியா தேர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 01, 2023
10:23 am

செய்தி முன்னோட்டம்

2034ஆம் ஆண்டுக்கான பிபா உலகக் கோப்பை போட்டியை சவூதி அரேபியா நடத்தும் என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தலைவர் கியானி இன்ஃபான்டினோ அறிவித்தார். இது குறித்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 31) அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 2030 பிபா உலகக்கோப்பையை அர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே இணைந்து நடத்தும் என்றும், 2034 உலகக்கோப்பையை சவூதி அரேபியா நடத்தும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, அனைத்து ஆறு கூட்டமைப்புகளும் பிபா கவுன்சிலில் இதை ஒருமனதாக அங்கீகரித்ததாக அவர் கூறினார். ஏலத்தில் பங்கேற்கும் முடிவில் இருந்து கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா பின்வாங்கியதை அடுத்து, ஏலத்தை சமர்ப்பித்த ஒரே நாடாக சவூதி அரேபியா மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Instagram அஞ்சல்

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தலைவரின் இன்ஸ்டாகிராம் பதிவு