உதட்டுமுத்த சர்ச்சை; ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவருக்கு பிபா தலைவர் கண்டனம்
ஸ்பெயின் மகளிர் கால்பந்து நட்சத்திரமான ஜென்னி ஹெர்மோசோவிற்கு அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் முத்தமிட்ட சம்பவம் ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்தார். மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்தை வென்றதைத் தொடர்ந்து நடந்த விழாவில் இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த பிபா, ஆகஸ்ட் 24 அன்று ரூபியேல்ஸுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகளை தொடங்கியது. மேலும், அவரை தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கால்பந்து நிகழ்வுகளில் பங்கேற்க 90 நாட்களுக்கு தற்காலிகமாக தடை விதித்தது. ஒழுங்குமுறை விசாரணைக்கு பிறகு தடை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தது.
பிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ கண்டனம்
கியானி இன்ஃபான்டினோ மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்தாலும், பிபா நிர்வாகிகள் யாரும் சம்பவம் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) பிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ இது குறித்து வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ரூபியேல்ஸின் நடத்தை மகளிர் கால்பந்து உலகக்கோப்பை நிகழ்வையே கெடுத்துவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், "பிபாவின் ஒழுங்குமுறை அமைப்புகள் உடனடியாக தங்கள் பொறுப்பை ஏற்று தேவையான நடவடிக்கைகளை எடுத்தன. ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடரும்." என்று அவர் கூறினார். இதற்கிடையே, வீராங்கனையின் உதட்டில் வலுக்கட்டாயமாக ரூபியால்ஸ் முத்தமிட்டதை அடுத்து, 80க்கும் மேற்பட்ட ஸ்பெயின் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த காலவரிசையைப் பகிரவும்