ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் குவைத்துடன் இந்தியா பலப்பரீட்சை
இந்திய ஆடவர் கால்பந்து அணி ஃபிஃபா உலகக்கோப்பை 2026 ஏஎப்சி தகுதிச்சுற்றுப் போட்டியின் இரண்டாவது சுற்றில் குவைத் அணிக்கு எதிராக வியாழகிழமை (நவம்பர் 16) மோதவுள்ளது. 2026 உலகக் கோப்பை ஏஎப்சி தகுதிப்போட்டியின் இரண்டாவது சுற்றில் 36 அணிகள் நான்கு அணிகள் கொண்ட ஒன்பது குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குழுவில் முதலிடம் பெறும் அணிகள் 2026 உலகக் கோப்பைக்கான மூன்றாவது சுற்று தகுதிச்சுற்றுக்கு தகுதி பெறும் மற்றும் 2027 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறும் ஏஎப்சி ஆசிய கோப்பையில் நேரடியாக நுழையும். சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி, குரூப் ஏ பிரிவில் உள்ளது. ஏ பிரிவில் உள்ள மற்ற அணிகள் குவைத், கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகும்.
உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்கான இந்திய கால்பந்து அணி வீரர்களின் பட்டியல்
கோல்கீப்பர்கள்: அம்ரீந்தர் சிங், குர்பிரீத் சிங் சந்து, விஷால் கைத். டிஃபெண்டர்கள்: ஆகாஷ் மிஸ்ரா, லால்சுங்னுங்கா, மெஹ்தாப் சிங், நிகில் பூஜாரி, ராகுல் பெகே, ரோஷன் சிங் நௌரெம், சந்தேஷ் ஜிங்கன், சுபாசிஷ் போஸ். மிட்ஃபீல்டர்கள்: அனிருத் தாபா, பிராண்டன் பெர்னாண்டஸ், கிளான் பீட்டர் மார்ட்டின்ஸ், லாலெங்மாவியா, லிஸ்டன் கோலாகோ, மகேஷ் சிங் நௌரெம், நந்தகுமார் சேகர், ரோஹித் குமார், சாஹல் அப்துல் சமத், சுரேஷ் சிங் வாங்ஜாம், உதாந்த சிங் குமம். முன்கள வீரர்கள்: இஷான் பண்டிதா, லல்லியன்சுவாலா சாங்டே, மன்வீர் சிங், ராகுல் கன்னோலி பிரவீன், சுனில் சேத்ரி, விக்ரம் பர்தாப் சிங்.