
ஐபிஎல் 2023 : ரிஷப் பந்திற்கு மாற்றாக அபிஷேக் போரல்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த டெல்லி கேப்பிடல்ஸ்!
செய்தி முன்னோட்டம்
டெல்லி கேப்பிடல்ஸ் இறுதியாக ஐபிஎல் 2023 தொடரில் ரிஷப் பந்துக்கு மாற்றாக 20 வயதான அபிஷேக் போரலை அணியில் சேர்த்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் ஓய்வில் இருப்பதால் அவருக்கு பதிலாக அபிஷேக் மாற்று வீரராக சேர்க்கப்படும் தகவல் ஏற்கனவே கசிந்திருந்த நிலையில், தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அபிஷேக் போரல் தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 16 முதல்தர, 3 லிஸ்ட் ஏ மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 58 கேட்சுகள் மற்றும் 8 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ரஞ்சி டிராபியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் போரல் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து நல்ல ஃபார்மில் உள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
டெல்லி கேப்பிடல்ஸ் ட்வீட்
🚨 ANNOUNCEMENT 🚨
— Delhi Capitals (@DelhiCapitals) March 31, 2023
Wicketkeeper-batter Abishek Porel will be Rishabh Pant's replacement for the TATA IPL 2023
Welcome to the DC family, Abishek 🙌#YehHaiNayiDilli pic.twitter.com/R6ZcrDw4sL