மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட் மைல்கல்லை எட்டி தீப்தி ஷர்மா சாதனை
மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். 26 வயதான அவர், மும்பை வான்கடே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான தனது முதல் விக்கெட் மூலம் இந்த சாதனையை எட்டினார். இதன் மூலம், சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை தீப்தி பெற்றுள்ளார். இதற்கு முன்னர், நூஷின் அல் கதீர் (100), ஜூலன் கோஸ்வாமி (155) மற்றும் நீது டேவிட் (141) ஆகிய மூன்று இந்திய வீராங்கனைகள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.