CT 2025: நியூசிலாந்து அணிக்கு 250 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது இந்தியா
செய்தி முன்னோட்டம்
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 2) நடைபெற்ற இந்தியா vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், நியூசிலாந்து அணிக்கு 250 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே 2 ஷுப்மன் கில்லை (2 ரன்கள்) இழந்தது.
பின்னர் ரோஹித் ஷர்மா (15 ரன்கள்) மற்றும் விராட் கோலியும் (11 ரன்கள்) சொற்ப ரன்களில் அவுட்டாக, இந்தியா பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.
பிறகு ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் இணைந்து அணியை மீட்டனர்.
மாட் ஹென்றி
மாட் ஹென்றி அபார பந்துவீச்சு
நிதானமாக விளையாடி வந்த அக்சர் படேல் 42 ரன்களில் அவுட்டாக, அரைசதம் கடந்த ஷ்ரேயாஸ் ஐயர் 79 ரன்களில் அவுட்டானார்.
கே.எல்.ராகுல் 23 ரன்களும், ஹர்திக் பாண்டியா 45 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 16 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் சிறப்பாக பந்துவீசிய மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 250 ரன்கள் வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தொடங்குகிறது.
முன்னதாக, இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இந்த போட்டியின் வெற்றி தோல்வியால் இரு அணிகளுக்கும் பாதிப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.