CT 2025 இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு 252 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
செய்தி முன்னோட்டம்
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு 252 ரன்களை வெற்றி இலக்காக நியூசிலாந்து நிர்ணயித்துள்ளது.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஜோடி நிதானமாக விளையாடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றாலும், வில் யங் 15 ரன்களில் வருண் சக்ரவர்த்தியிடம் அவுட்டானார்.
வில் யங் அவுட்டான உடன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ராச்சின் ரவீந்திரா 37 ரன்களிலும், கேன் வில்லியம்சன் 11 ரன்களிலும் குல்தீப் பந்துவீச்சில் வீழ்ந்தனர்.
அரைசதம்
டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல் அரைசதம்
பின்னர் வந்தவர்களில் டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் மட்டும் அரைசதம் கடந்தனர்.
இதில் டேரில் மிட்செல் 63 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 53 ரன்களும் எடுத்தனர்.
இதற்கிடையே கிளென் பிலிப்ஸ் தன் பங்கிற்கு 34 ரன்கள் சேர்க்க, நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் சேர்த்தது.
இந்திய கிரிக்கெட் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து 252 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.