சிஎஸ்கே vs டெல்லி கேப்பிடல்ஸ் : வானிலை அறிக்கை மற்றும் பிட்ச் நிலவரம்
ஐபிஎல் 2023 சீசனின் 55வது போட்டியில் புதன்கிழமை (மே 10) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த சீசனில் முதன்முறையாக, சென்னை சூப்பர் கிங்ஸ் சொந்த மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸை பொறுத்தவரை, இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளுடன் பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்யும் நிலையில் உள்ளது. மேலும் கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியுடன் முடித்துள்ளது. மறுபுறம் டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த சீசனில் நான்கு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் பிட்ச் அறிக்கை
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கான ஆடுகளம் எப்போதும் போல் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஐந்து ஆட்டங்களில் 3 ஆட்டங்கள் சேஸிங் அணிகளுக்கு சாதகமாக முடிந்தன. எனவே, அணிகள் முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் 220 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும் அல்லது முதலில் பந்துவீச வேண்டும். சென்னை வானிலை அறிக்கையை பொறுத்தவரை நாளைய ஆட்டத்தில் மழை பெய்ய பூஜ்ஜிய வாய்ப்பே உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை சுமார் 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் தெளிவான வானத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.