
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு புது கேப்டன்கள் நியமனம்!
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் ஒயிட்-பால் கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக இருந்த நிக்கோலஸ் பூரன் ஓய்வு பெற்ற நிலையில், அவருக்குப் பதிலாக ஷாய் ஹோப் மற்றும் ரோவ்மேன் பவல் ஆகியோர் முறையே அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் தென்னாப்பிரிக்காவிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிக்கோலஸ் பூரன் கேப்டனாக இருந்தபோது இருவரும் ஹோப் ஒருநாள் அணிக்கும், மற்றும் பவல் டி20 அணிக்கும் துணை கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்
🚨BREAKING NEWS🚨
— Windies Cricket (@windiescricket) February 15, 2023
CWI announces new captains for White-Ball formats.
Read More⬇️ https://t.co/Bmw7qILA9p pic.twitter.com/suNk7ndqKE