
மாரடைப்பிலிருந்து மீண்ட கிறிஸ்டியன் எரிக்சன் : லாரஸ் வேர்ல்ட் கம்பேக் விருது வழங்க வலியுறுத்திய யுவராஜ் சிங்
செய்தி முன்னோட்டம்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், கால்பந்து வீரர் கிறிஸ்டியன் எரிக்சனுக்கு லாரஸ் வேர்ல்ட் கம்பேக் விருது வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடந்த வருடம் டென்மார்க் மற்றும் பின்லாந்து அணிகளுக்கு இடையில் நடந்த யூரோ கோப்பை போட்டியின் போது எரிக்சன் மாரடைப்பு காரணமாக மைதானத்தில் சரிந்து விழுந்தார்.
இதைத் தொடர்ந்து, எரிக்சன் சில மாதங்கள் ஓய்வு எடுத்துவிட்டு தற்போது இங்கிலாந்து லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெடிற்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், 2011இல் தனக்கு ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்ததை நினைவுகூர்ந்த யுவராஜ் சிங், "எரிக்சன் நிச்சயமாக அத்தகைய விருதுக்கு தகுதியானவர் என்று நான் உணர்கிறேன். அவர் எதிர்காலத்தில் லாரஸ் தூதராக இருக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
மான்செஸ்டர் யுனைடெட் ட்வீட்
Inspirational sporting comebacks 💪@YuvStrong12 🤝 @ChrisEriksen8#MUFC || @LaureusSport
— Manchester United (@ManUtd) March 14, 2023