Page Loader
'தல' தோனியுடன் பொம்மன், பெல்லி! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சந்திப்பு!
பொம்மன், பெல்லியுடன் 'தல' தோனி

'தல' தோனியுடன் பொம்மன், பெல்லி! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சந்திப்பு!

எழுதியவர் Sekar Chinnappan
May 10, 2023
01:30 pm

செய்தி முன்னோட்டம்

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், "தி எலிபன்ட் விஸ்பரர்" படத்தில் நடித்த பொம்மன், பெல்லி மற்றும் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வேஸை எம்எஸ் தோனி சந்தித்துள்ளார். மேலும் தோனியின் ஏழாம் எண்ணுடன் பொம்மன், பெல்லி மற்றும் கார்த்திகி பெயர் பொறித்த ஜெர்சியையும் அவர்களுக்கு வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ளது. "தி எலிபண்ட் விஸ்பரர்" ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருது வென்றது குறிப்பிடத்தக்கது. முதுமலை தெப்பக்காட்டில் உள்ள யானை முகாமின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இதில் அங்கு யானைகளை வளர்த்து வரும் பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய இருவருமே நடித்திருந்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post