சென்னை ரசிகர்களுக்கு நற்செய்தி! நாளை நடக்கும் சிஎஸ்கே-மும்பை போட்டிக்கு இலவச மெட்ரோ பயணம்
செய்தி முன்னோட்டம்
நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள், மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) அறிவித்துள்ளது. சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு ரசிகர்கள் தடையின்றிப் பயணிக்கும் வகையில், சிஎஸ்கே கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த சிறப்புச் சலுகையை வழங்குகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
IPL 2026 போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கலாம்
— Chennai Metro Rail (@cmrlofficial) April 30, 2026
பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், நகரில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்குத் தடையற்ற பயணத்தை வழங்கவும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் CSK Cricket…
விதிமுறை
டிக்கெட்டே உங்களுக்கான பயணச்சீட்டு
போட்டியைக் காண டிக்கெட் (டிஜிட்டல் மற்றும் அச்சுப் பிரதி ஆகிய இரண்டும்) வைத்திருக்கும் ரசிகர்கள், அதில் உள்ள பிரத்யேக QR குறியீட்டை ஸ்கேன் செய்து இலவசமாகப் பயணிக்கலாம். இந்த சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) மட்டுமே பொருந்தும். சென்னையில் செயல்பாட்டில் உள்ள எந்தவொரு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும், சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் (Government Estate) மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இடையே இலவசமாகப் பயணிக்க முடியும்.
சிறப்பு ரயில்
நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரயில் சேவைகள்
நாளை இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குவதால், ரசிகர்கள் நள்ளிரவில் வீடு திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு மெட்ரோ ரயில் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் சென்னை விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் கடைசி மெட்ரோ ரயில்கள் நள்ளிரவு 01:00 மணிக்கு புறப்படும். பச்சை வழித்தடம் (Line 2): இந்த வழித்தடத்தில் செல்லும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் (Central) மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டுமே வழித்தடத்தை மாற்றிக்கொள்ள (Interchange) முடியும். ரசிகர்கள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.