'இது போங்காட்டம்' : புடாபெஸ்ட் ஓபன் போட்டியில் சீன வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்
ஓபன் டென்னிஸ் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய ஆட்டங்களில் ஒன்றாக, செவ்வாய்கிழமை (ஜூலை 18), புடாபெஸ்ட் ஓபன் 2023 இல் நடந்த போட்டி அமைந்துள்ளது. இதில் முதல் சுற்றில் சீனாவின் மூத்த வீராங்கனை ஜாங் ஹங்கேரியின் அமைசா டோத்தை எதிர்கொண்டபோது ஜாங் அடித்த ஷாட் டோத்தின் பக்கத்தில் வெள்ளைக் கோட்டில் விழுந்தது. ஆனால் அது வெளியே விழுந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த ஜாங் நடுவரிடம் விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது டோத் தனது ஷூவால் பந்து வெள்ளைக் கோட்டில் பட்ட அடையாளத்தால் துடைத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ராக்கெட் அல்லது ஷூவைக் கொண்டு பந்தின் அடையாளத்தைத் துடைப்பது விதிகளுக்கு எதிரானது. இது குறித்து முறையிட்டும் நடுவர் நிராகரித்ததால், விரக்தியடைந்து போட்டியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.