இங்கிலாந்தில் கிராண்ட் மாஸ்டர் ஆன தமிழ் சிறுமி: 11 வயதில் சாதனை படைத்தார் போதனா சிவானந்தன்
செய்தி முன்னோட்டம்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இங்கிலாந்து நாட்டின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது மாணவி போதனா சிவானந்தன் பங்கேற்றார். இந்த ஒலிம்பியாட் போட்டியில் அவர் வெளிப்படுத்திய ஆட்டத்தைத் தொடர்ந்து, அவரை கிராண்ட் மாஸ்டராக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். போதனா லண்டனில் பிறந்து ஹாரோவில் வசித்து வருகிறார்; இவரது பெற்றோர் தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சதுரங்கப் பயிற்சி
60 வயது கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய சாதனை
போதனா சிவானந்தன் தனது 5-வது வயதில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இணையதளம் வழியாகவே சதுரங்க நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு செஸ் விளையாடத் தொடங்கினார்.
தொடர்ந்து கடினப் பயிற்சி பெற்று முன்னேறிய இவர், 2025 ஆகஸ்டில் நடந்த பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 60 வயதான கிராண்ட்மாஸ்டர் பீட்டர் வெல்ஸைத் தோற்கடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
அப்போது 10 வயது 5 மாதங்களில் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய மிக இளம் பெண் என்ற அமெரிக்காவின் கரிசா யிப் சாதனையை முறியடித்தார்.
இந்த சாதனை குறித்துப் பேசிய போதனா சிவானந்தன், இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது; இத்தோடு நின்றுவிடாமல் தொடர்ந்து முன்னேறி வரலாறு படைக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.