பார்டர் கவாஸ்கர் டிராபி 5வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு சுருண்டது இந்தியா
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு சுருண்டது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3) தொடங்கிய இந்த போட்டியில் இருந்து கேப்டன் ரோஹித் ஷர்மா விலகிய நிலையில், துணைக் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.
டாஸ் வென்ற ஜஸ்ப்ரீத் பும்ரா முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா அணியை மீட்க போராடினர்.
எனினும், ரிஷப் பண்ட் 40 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 26 ரன்களிலும் அவுட்டாகினர்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சு
ஆஸ்திரேலிய பந்துவீச்சு அபாரம்
அதன் பின்னர், களமிறங்கியவர்களில் ஜஸ்ப்ரீத் பும்ரா அதிரடியாக விளையாடி 22 ரன்கள் சேர்த்தார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரும் அடங்கும்.
இந்த போட்டியில் ரிஷப் பண்டும் ஜஸ்ப்ரீத் பும்ராவும் தலா 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கைத் தொடங்கிய நிலையில், இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.