NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பார்டர் கவாஸ்கர் டிராபி: இந்தியாவுக்கு எதிராக மீண்டும் அதே அணியை களமிறக்குகிறது ஆஸ்திரேலிய அணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பார்டர் கவாஸ்கர் டிராபி: இந்தியாவுக்கு எதிராக மீண்டும் அதே அணியை களமிறக்குகிறது ஆஸ்திரேலிய அணி
    இந்தியாவுக்கு எதிராக மீண்டும் அதே அணியை களமிறக்குகிறது ஆஸ்திரேலியா

    பார்டர் கவாஸ்கர் டிராபி: இந்தியாவுக்கு எதிராக மீண்டும் அதே அணியை களமிறக்குகிறது ஆஸ்திரேலிய அணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 26, 2024
    05:31 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், பெர்த்தில் விளையாடிய அதே 13 பேர் கொண்ட அணி எந்த மாற்றமும் இல்லாமல் அடிலெய்டில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அப்படியே களமிறங்கும் என அறிவித்துள்ளார்.

    முன்னதாக, பெர்த் மைதானத்தில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணியிடம் தோல்வி அடைந்தாலும், அதே அணியை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தோல்வியானது 40 ஆண்டுகளில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியைக் குறித்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, பெர்த் டெஸ்டில் 17 ஓவர்கள் வீசிய பிறகு மிட்செல் மார்ஷின் உடற்தகுதி குறித்து கவலைகள் எழுந்தன.

    ஆஸ்திரேலிய அணி

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியல்

    மிட்செல் மார்ஷ் கிடைக்கவில்லை என்றால், ஆஸ்திரேலியா ஒரு கடினமான முடிவை எதிர்கொள்கிறது.

    அவர் இல்லையெனில் ஜோஷ் இங்கிலிஷ் சேர்த்துக் கொல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸுடன் உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுஸ்சாக்னே போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ் ஸ்காட் போலண்ட்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பார்டர் கவாஸ்கர் டிராபி
    டெஸ்ட் மேட்ச்
    டெஸ்ட் கிரிக்கெட்
    இந்தியா vs ஆஸ்திரேலியா

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    பார்டர் கவாஸ்கர் டிராபி

    பார்டர் கவாஸ்கர் டிராபியில் பங்குபெறும் சத்தேஷ்வர் புஜாரா; இந்தி வர்ணனையாளர் குழுவில் இடம் இந்தியா vs ஆஸ்திரேலியா
    கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ராவின் செயல்திறன் எப்படி? புள்ளி விபரம் இதுதான் ஜஸ்ப்ரீத் பும்ரா
    பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25: தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் சேர்ப்பு; பிசிசிஐ அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    பார்டர் கவாஸ்கர் டிராபி: டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 புதிய மைல்கல் சாதனை படைக்கும் முனைப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

    டெஸ்ட் மேட்ச்

    INDvsNZ 2வது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக 11 விக்கெட்டுகள்; சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்த வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் கிரிக்கெட்
    INDvsNZ 2வது டெஸ்ட்; 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; இந்திய அணியின் 12 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்
    தொடர் தோல்விகளால் பின்னடைவு; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    92 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை யஷஸ்வி ஜெய்ஸ்வால்

    டெஸ்ட் கிரிக்கெட்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடமில்லை; இன்ஸ்டாகிராமில் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய முகமது ஷமி முகமது ஷமி
    INDvsNZ 3வது டெஸ்ட்: 24 ஆண்டுகால சாதனைக்கு ஆபத்து; மூன்றாவது போட்டியிலும் தோற்றால் இந்திய அணியின் நிலை இதுதான் இந்திய கிரிக்கெட் அணி
    INDvsNZ 3வது டெஸ்ட் போட்டி: ஆறுதல் வெற்றியையாது பெறுமா இந்திய அணி? இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட்
    INDvsNZ 3வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட்

    இந்தியா vs ஆஸ்திரேலியா

    இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது டி20I: ஆஸ்திரேலிய அணிக்கு 175 ரன்கள் இலக்கு இந்திய கிரிக்கெட் அணி
    நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா இந்திய கிரிக்கெட் அணி
    இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள் டி20 கிரிக்கெட்
    இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : சின்னச்சாமி ஸ்டேடியத்தின் புள்ளிவிபரங்கள் டி20 கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025